காவிரியில் 25,000 கன அடி சீறிவரும் வெள்ளம்... வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
காவிரியில் 25,000 கன அடி சீறிவரும் வெள்ளம்... வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து இருபத்தி ஐந்தாயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கடந்த நான்கு நாட்களாக விநாடிக்கு பதினெட்டாயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது நீர் வரத்து அதிகரித்தது.
கர்நாடகா அணைகளில் இருந்து சுமார் 45 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில், காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது