சென்னையில் முதல் முறையாக IPL Fan Park - எல்லாருக்கும் FREE.. FREE.. ரெடியா மக்களே.!

Update: 2025-05-23 15:26 GMT

சென்னையில் முதல் முறையாக, மே 24 மற்றும் 25 தேதிகளில் IPL Fan Park நிகழ்ச்சி ஓ.எம்.ஆர். சாலையில் நடைபெறுகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பிசிசிஐ முதுநிலை மேலாளர் மோகன், பெரிய திரையில் IPL போட்டிகள் நேரலையாக ஒளிபரப்பப்படும் இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்தார். மேலும், அங்கு குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகள், உணவகம் உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்