“மதராஸி திரைப்படத்திற்கு முதல் விமர்சனம்“
மதாராஸி ஒரு மூன்று மடங்கு பெரிய வெற்றி திரைப்படம் என விநியோகிஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளது, ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் மீதான ஆர்வத்தை அதிகமாக்கியுள்ளது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்நிலையில் அந்த திரைப்படத்தை விநியோகிக்கும் விநியோகிஸ்தர் ஒருவர் திரைப்படத்தை பார்த்துவிட்டு எக்ஸ் தளத்தில், ஏ ஆர் முருகதாஸ், சிவ கார்த்திக்கேயன், அனிருத் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ள இந்த திரைப்படம், ஒரு ட்ரிபிள் ட்ரீட் என கூறியுள்ளார். இந்த பதிவு, ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.