Group 2 Exam | குரூப் 2-வில் முதலிடம் - இந்திய அளவில் கவனம் பெற்ற தமிழக மாணவி

Update: 2025-06-23 04:45 GMT

குரூப் 2 - வில் முதல் இடம் பிடித்த பெண்ணுக்கு தங்க தமிழ்ச்செல்வன் பாராட்டு

தேனி மாவட்டம் கம்பத்தில், குரூப் 2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த பெண்ணுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். கம்பம் நகரை சேர்ந்தவர் நபிலா. இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், தொடர்ந்து போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வந்தார். சமீபத்தில் நடந்த குரூப்-1 தேர்வில் இந்திய அளவில் 27 வது இடமும், குரூப் 2 தேர்வில் தமிழக அளவில் முதல் இடமும் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் நபிலா வீட்டிற்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், அவரை பாராட்டி, வாழ்த்துகள் தெரிவித்து உதவி தொகை வழங்கி கௌரவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்