ஜொலிக்கும் மின்மினி பூச்சி அறை | வியந்து பார்க்கும் சுற்றுலா பயணிகள் | Nilgris
கூடலூர் ஜீன் பூல் தாவரவியல் ஆராய்ச்சி மையத்தில், சுற்றுலா பயணிகளுக்காக மின்மினி பூச்சி அறை திறக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஜீன் பூல் தாவரவியல் ஆராய்ச்சி மைத்தில் சுற்றுலா பயணிகளை கவர பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், புதிய மின்மினி பூச்சி அறை திறக்கப்பட்டுள்ளது. இருள் சூழ்ந்த இந்த அறைக்குள் சுற்றுலா பயணிகள் சென்றால் இயற்கையில் மின்மினி பூச்சிகளை எவ்வாறு ரசிக்க முடியுமோ அதே போன்ற அனுபவத்தை அவர்களால் பெற முடிகிறது. சுற்றுலா பயணிகளின் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது