10ம் வகுப்பு தேர்வில் தந்தை, மகன் தேர்ச்சி - ஸ்வீட் கொடுத்து கொண்டாடிய உறவினர்கள்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 10 வகுப்பு தேர்வில் தந்தை மற்றும் மகன் பெற்றதையறிந்து குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மண்டபசாலையில் கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வருபவர் செந்தில் குமார். இவரது மகன் கவின்குமார் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில், இருவரும் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.