கண் மருத்துவமனையில் "SMILE PRO" எனும் புதிய சிகிச்சை அறிமுகம்

Update: 2025-08-07 11:35 GMT

இந்தியாவின் புகழ்பெற்ற THE EYE FOUNDATION நிறுவனம், "SMILE PRO" எனும் புதிய கண் சிகிச்சை முறையை அறிமுகம் செய்துள்ளது. கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரத்தில், இந்தியாவின் பிரபலமான THE EYE FOUNDATION நிறுவனம் இயங்கி வருகிறது. கண் மருத்துவத்தில் பல சாதனைகளை புரிந்த இந்த மருத்துவமனை "SMILE PRO" எனும் புதிய கண் சிகிச்சை முறையை அறிமுகம் செய்துள்ளது. உலகளவில் சிறந்து விளங்கும் ZEISS நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட SMILE PRO மூலமாக மேற்கொள்ளப்படும் இந்த மருத்துவ முறை, சிகிச்சை பெறுபவர் கண்களுக்கு ஏற்ப தானாகவே சிகிச்சையளிக்கும் எனவும், எட்டு வினாடிகள் மட்டுமே நடக்கும் இந்த சிகிச்சை முடிந்த மறு நாளே சிகிச்சை பெற்றோர், வழக்கமாக செயல்படலாம் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். 1997-ம் ஆண்டு இந்தியாவின் மூன்றாவது நிறுவனமாக லேசிக் தொழில்நுட்பத்தை தி ஐ ஃபவுண்டேஷன் மருத்துவமனை அறிமுகப்படுத்திய நிலையில், தற்பொழுது 28 ஆண்டுக்கு பிறகு இந்த புதிய கண் சிகிச்சை முறையை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்