திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில், சுற்றுலாவை மேம்படுத்த 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார். அதன்படி10 கி.மீ. நீள ஊராட்சி ஒன்றிய சாலைகள் தரம் உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார். ஏலகிரி மலை பராமரிப்பு இல்லாமல் பொலிவிழந்து வருவதாகவும், அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து வருவதாகவும் தந்தி டிவியில் செய்தி வெளியான நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனிடையே 4 ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ள கோடை விழாவை மீண்டும் நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.