Elephant | Kovai | ``என்னடா இது.. நம்ம பாகுபலிக்கு வந்த சோதனை’’.. வைரலாகும் குபீர் வீடியோ
கோவையில், சோலார் மின்வேலியை அகற்ற முடியாமல் திணறிய பாகுபலி யானையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கோவை, சிறுமுகை வனப்பகுதியில் இருந்து வச்சினம்பாளையம் கிராமத்திற்குள் காட்டுயானை ஒன்று, உணவு தேடி விவசாயி வீட்டிற்குள் நுழைய முயன்றது. இந்த நிலையில் விவசாயி, வீட்டிற்கு வெளியே சோலார் மின்வேலி அமைத்திருந்ததால், அதை அகற்ற முடியாமல் நீண்ட நேரமாக போராடிய பாகுபலி யானை அங்கிருந்து ஏமாற்றத்துடன் சென்றது. பாகுபலி யானை மின்வேலியை அகற்ற முடியாமல் திணறும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.