மின்கம்பத்தில் மோதிய ஷேர் ஆட்டோ.. துடிதுடித்து பலியான பயணி..

Update: 2025-01-29 01:50 GMT

மதுரையில் மின்கம்பம் மீது ஷேர் ஆட்டோ மோதியதில், பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பொண்ணாங்கன் என்பவர் தனது ஷேர் ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு கோமதிபுரம் வழியாக சென்றபோது, சாலை சந்திப்பின் குறுக்கே இருசக்கர வாகனம் வந்ததால், அதன் மீது மோதாமல் இருக்க ஆட்டோவை திருப்பினார். அப்போது, ஷேர் ஆட்டோ மின்கம்பம் மீது மோதி, ஆட்டோவில் வந்த மீனாட்சி சுந்தரம் என்பவர் பலத்த காயம் அடைந்தார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த இடத்தில் அடிக்கடி விபத்து நடப்பதால், வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்