Thiruparankundram Case | தி.குன்றம் வழக்கு - நீதிபதி விக்டோரியா கவுரி அதிரடி உத்தரவு
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு திருக்கார்த்திகை தீபத்தன்று, திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்திய 12 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இதை எதிர்த்து மதுரையை சேர்ந்த ரகுநாத், திருமலை, விவேக் உள்ளிட்ட 12 பேர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த விவகாரத்தில் அரசுத்தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும், வழக்கை பிப்ரவரி 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் நீதிபதி விக்டோரியா கவுரி உத்தரவிட்டார்.