ரோட்டின் நடுவே மின்கம்பத்தை வைத்து போடப்பட்ட புதிய சாலை - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

Update: 2025-04-06 04:55 GMT

திருப்பத்தூர் அருகே சாலை நடுவே உள்ள மின் கம்பத்தை அகற்றாமல் புதிய தார் சாலை அமைத்திருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தை அடுத்த மற்றப்பள்ளி ஊராட்சியில், 1 கோடியே 70 லட்சம் ரூபாய்க்கு புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கிருக்கும் மின்கம்பத்தை அகற்றாமல் தார்சாலை அமைத்துள்ள நிலையில், விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்