பயன்பாட்டிற்கு வரும் மின்சார பேருந்துகள் - அசத்தல் அறிவிப்பு.. எப்போது தெரியுமா?

Update: 2025-04-20 07:43 GMT

மின்சார பேருந்து திட்டத்தினை, வரும் ஜுன் மாதம், முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில், 32 புதிய மகளிர் விடியல் பயண பேருந்துகள் மற்றும் 60 பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், மின்சார பேருந்து திட்டத்தினை, வரும் ஜூன் மாதத்தில், முதலமைச்சர் துவங்கி வைக்க உள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்