Sivagangai | Eyeoperation | கண்புரை சிகிச்சை பெற்ற பெண்ணுக்கு பறிபோன பார்வை
சிவகங்கை அரசு மருத்துவமனையில், தவறான சிகிச்சை காரணமாக மூதாட்டிக்கு பார்வை இழப்பு ஏற்பட்டதாக, ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. விளாங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சாத்தப்பன் என்பவரின் மனைவி பூரணத்திற்கு கடந்த நவம்பர் மாதம், கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகு, அவருக்கு முழுமையாக பார்வை இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு கண்ணில் லென்ஸ் சரியாக பொருத்தப்படவில்லை என தனியார் மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, தவறு செய்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாத்தப்பன், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனு குறித்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.