Kanchipuram | Theft | 18 நாட்கள் போலீஸ் வலைவீசி தேடிய கொடூரன்- தாம்பரத்தில் பிடிபட்டான்

Update: 2026-01-04 09:34 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே நகைக்காக மூதாட்டி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே கிராமத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்...

நத்தாநல்லூர் கிராமத்தில் வசித்து வந்தவர் மூதாட்டி அலங்காரம். இவருக்கு மகன் மற்றும் மகள்கள் உள்ள நிலையிலும், தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த மாதம்16 ஆம் தேதி, அலங்காரம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது.

சம்பவம் குறித்து வழக்குபதிந்த வாலாஜாபாத் போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளியை தீவிரமாக தேடி வந்தனர்.

அதன்படி, அதே பகுதியை சேர்ந்த ராமராஜன் என்ற என்ற இளைஞரை, சென்னை தாம்பரத்தில் வைத்து கைது செய்த போலீசார், நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

ராமராஜன் செல்போன் எதுவும் பயன்படுத்தாததால் போலீசார் 18 நாட்கள் தொடர் தேடுதல் வேட்டை நடத்தி தாம்பரம் அருகே சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்