தமிழகத்தில் பெரும் புயலை கிளப்பிய டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்டா?

Update: 2025-07-19 06:59 GMT

அதிகாரிகள் டார்ச்சர் செய்வதாக கூறிய டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்?

உயர் அதிகாரிகள் தன்னை டார்ச்சர் செய்வதாக குற்றம்சாட்டியிருந்த மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்ய மாவட்ட எஸ்.பி பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு டிஎஸ்பியாக பணியில் இருந்த சுந்தரேசன், இரண்டு நாட்களுக்கு முன்பு அமைச்சரின் பாதுகாப்பு பணிக்கு தன்னுடைய கார் எடுத்து செல்லப்பட்டதாகவும், அதிலிருந்து தனக்கு கார் வழங்க மறுத்ததாகவும் குற்றம்சாட்டி நடந்து சென்ற வீடியோ வேகமாக பரவியது.

மேலும், உயர் அதிகாரிகள் தன்னை டார்ச்சர் செய்கின்றனர், 4 மாதங்களாக சம்பளம் போடவில்லை என குற்றம்சாட்டியிருந்தார்.

இது சர்ச்சையாக வெடிக்க, டிஎஸ்பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்ய திருச்சி ஐஜிக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்