உணவில் கலந்த நாயின் ரத்தம்? - சாப்பிட்ட 9 மாணவிகளுக்கு நேர்ந்த கதி

Update: 2025-07-17 02:55 GMT

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் காலை உணவு சாப்பிட்ட 9 மாணவிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்ட நிலையில், விடுதியின் சமையல் அறையில் தெருநாய்கள் செல்வதே இதற்குக் காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளியில் சமையல் அறையில் நோய்வாய்ப்பட்ட தெரு நாய்கள்,, ரத்தம் சொட்ட சொட்ட திரிவதாகவும் அதன் ரத்தம் உணவில் கலந்திருக்கலாம் எனவும் அப்பகுதியினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்