காப்பாத்த முயன்றவரை கடித்த நாய் - ரேபிஸால் பிரிந்த கபடி வீரரின் உயிர் - அவதிப்படும் அதிர்ச்சி வீடியோ

Update: 2025-06-30 13:43 GMT

உத்தரப்பிரதேசம் புலந்த்ஷாஹர் (Bulandshahar) மாவட்டத்தைச் சேர்ந்த மாநில அளவிலான கபடி வீரர் பிரிஜேஷ் சோலன்கி(Brijesh Solanki), ரேபிஸ் நோயால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 3 மாதங்களுக்கு முன்பு, சாக்கடையில் விழுந்த ஒரு நாயை காப்பாற்ற முயன்றபோது, அந்த நாய் அவரை கடித்ததாகவும், தடுப்பூசி ஏதும் போடாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, அவருக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டு, அவரது உடல்நிலை மோசம் ஆன நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பல்வேறு போட்டிகளில் தங்கம் பெற்ற இளம் கபடி வீரரின் துயர மரணம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்