இயக்குநர் தங்கர் பச்சானின் அண்ணன் பேத்தியான சரண்யா சரவணன் சிவில் சர்வீஸ் தேர்வில் 125வது இடத்தை பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார். கடலூர் மாவட்டம் பத்திரக்கோட்டையை சேர்ந்த தங்கர் பச்சானின் அண்ணன் செல்வராசு. இவரது பேத்தி சரண்யா சரவணன் நான்காவது முறையாக சிவில் சர்வீஸ் தேர்வெழுதிய நிலையில், தற்போது 125வது இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.