Israel Iran War | இஸ்ரேலின் `ஆணிவேர்’ மொசாட்டை தாக்கியதா ஈரான்? - உலகை ஒரு நொடி திகைக்க வைத்த தகவல்
மொசாட் தலைமையகம் மீது ஈரான் தாக்குதலா? - இஸ்ரேல் மறுப்பு
இஸ்ரேலில் உளவு அமைப்பான மொசாட் தலைமையகம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையான ஐ.ஆர்.ஜி.சி தெரிவித்துள்ளது.
டெல் அவிவ் பகுதியில் செயல்படும் உளவுத்துறை மையமான மொசாட் பகுதியில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், மொசாட் தலைமையகத்தின் ஒரு பகுதியில் தீப்பற்றியதாகவும் கூறப்பட்டது. எனினும் இந்த தாக்குதலை இஸ்ரேல் மறுத்துள்ளது.