+2 மாணவிக்கு பிறந்த பெண் குழந்தை... ஒன்றாக குடும்பம் நடத்திய காதலன்... அதிர்ச்சியில் தர்மபுரி

Update: 2024-12-30 05:25 GMT

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே காதலனுடன் வாழ்ந்த 17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளதால், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காரிமங்கலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் 17 வயது மகள், 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். சிறுமியும், அதே பகுதியைச் சேர்ந்த தமிழ் மாறன் என்ற இளைஞரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இருவரும் கோயிலில் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இதில், கர்ப்பம் அடைந்த மாணவிக்கு கடந்த 11-ஆம் தேதி தர்மபுரி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து, பாலக்கோடு மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்