பூக்குழியில் விழுந்த பக்தர் - விருதுநகரில் அதிர்ச்சி சம்பவம்.. வைரலாகும் வீடியோ
அருப்புக்கோட்டையில் ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி நடந்த பூக்குழியில் பக்தர் ஒருவர் விழுந்து காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அக்னி சட்டி எடுத்தல், அழகு குத்துதல் உள்ளிட்டவை என பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழியில் 20-க்கும் மேற்பட்டோர் இறங்கிய நிலையில், ஒரு பக்தர் பூக்குழியில் இறங்கி நடந்தபோது திடீரென தடுமாறி விழுந்தார். உடனடியாக, அவரை அங்கிருந்த தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றி ஆம்புலன்ஸில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சையில் உள்ளார். இந்த சூழலில், இது குறித்த வீடியோ வைரலாகிறது.