மோசமடைந்த உடல்நிலை - மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட MP Sasikanth Senthil

Update: 2025-09-01 04:08 GMT

சசிகாந்த் செந்தில் எம்.பி- மேல் சிகிச்சைக்காக அனுமதி

கல்வி நிதியை விடுவிக்க கோரி உண்ணாவிரதம் இருந்த சசிகாந்த் செந்தில் உடல் நிலை மோசமடைந்ததை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை மத்திய பாஜக அரசு வழங்காததை கண்டித்து திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் கால வரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். இந்த நிலையில் ரத்த அழுத்தம் அதிகரிப்பு காரணமாக சசிகாந்த் திருவள்ளூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிப்பட்டார். இதனையடுத்து அங்கும் தனது போராட்டத்தை தொடர்வதாக அறிவித்த நிலையில், உடல் நிலை மோசமானது. இதனால் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்