கரும்பு தோட்டம் தீ வைப்பு- 4 ஏக்கர் கரும்பு நாசம்
கடலூர் பண்ருட்டி அருகே 4 ஏக்கர் கரும்பு தோட்டத்திற்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எஸ்.கே பாளையம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஹரி என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சக்திவேலின் கரும்பு தோட்டம் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடிய பிறகு தீயை அணைத்தனர். 4 ஏக்கர் கரும்பு தீயில் எரிந்து நாசம் ஆனதை பார்த்த விவசாயி சக்திவேல், அதே இடத்திலேயே கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதை தொடர்ந்து ஹரி மீதான சந்தேகத்தின் பேரில் சக்திவேல் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.