பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை
திருச்சி, பாரதிதாசன் சாலையில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சிலைக்கு அவரது 1350 வது பிறந்தநாளினை முன்னிட்டு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு சென்னை செல்லும் வழியில் திருச்சி வந்த அவருடன் அமைச்சர்கள் கே என் நேரு, ரகுபதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வீரவாள் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.