Minister Sivasankar | "விடியல் பயணம், ரூ.3600 கோடி ஒதுக்கீடு" - அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
விடியல் பயணம் திட்டத்திற்காக வரும் நிதியாண்டில் 3600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத் தொடரில் போக்குவரத்து துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தின் போது பேசிய அத்துறையின் அமைச்சர் சிவசங்கர், விடியல் பயணத்தில் 675 கோடி பெண்கள் பயணித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், ஒவ்வொரு பெண்ணிற்கும் இதன் மூலமாக 888 ரூபாய் மிச்சமாகிறது என சுட்டிகாட்டி பேசினார். மேலும் ஒவ்வொரு ஆண்டிலும் விடியல் பயணத்திற்காக ஒதுகப்படும் நிதி அதிகரித்து வருவதாகவும், வரும் நிதியாண்டிற்கு 3600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.