Governmenrt Doctor | நோயாளிகளுக்க சாபம் விட்டு.. அகங்காரத்தில் ராங் ராங்காக பேசிய அரசு டாக்டர்
நோயாளிகளுக்க சாபம் விட்டு.. அகங்காரத்தில் ராங் ராங்காக பேசிய அரசு டாக்டர் - "மூடிட்டு கம்முனு இருங்க"
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சிகிச்சைக்கு வந்த நபரிடம் பணியில் இருந்த மருத்துவர் ஒருவர் மிரட்டும் தொனியில் அலட்சியமாக பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் கீழே விழுந்து காயம் ஏற்பட்டதால், பண்ருட்டி நகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊசி போட்டு கொண்டுள்ளார். ஆனால், ஊசி போடப்பட்ட இடத்தில் தொற்று ஏற்பட்டு வீங்கிய நிலையில், இது குறித்து மருத்துவரிடம் பெற்றோர் கேட்டுள்ளனர். இதற்கு பதிலளிக்க மறுத்த அரசு மருத்துவர், தன்னை எதுவும் செய்ய முடியாது என்றும், வழக்கு தொடுப்பேன் என்றும் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.