கடலூர் மாவட்டத்தில் நாட்டு மருந்து கடை வியாபாரியை, கஞ்சா போதையில் இருந்த நபர்கள் கடித்து குதறி, வழிபறியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புவனகிரியில் சமீப காலமாக கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில், நாட்டு மருந்து கடை நடத்தி வரும் ஸ்டீபன் என்ற இளைஞரிடம், கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்ட 2 பேர், கழுத்து, காது உள்ளிட்ட இடங்களில் கடித்து குதறி, 8000 ரொக்கப்பணம், செல்போன் உள்ளிட்டவற்றையும் பறித்துச் சென்றனர். அவர்கள் தவறவிட்டு சென்ற கஞ்சா பொட்டலத்துடன் தான் புகார் அளித்தாலும், போலீசார் மதுபோதையில் குற்றம் நடந்தது போன்று வழக்குப்பதிவு செய்ததாக ஸ்டீபன் குமுறினார்.