Cuddalore | Panruti | அடுத்தடுத்து ஹாஸ்பிடலில் அட்மிட்டான மக்கள்- பண்ருட்டி அருகே நடந்தது என்ன?

Update: 2025-11-05 13:46 GMT

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் சுகாதாரமற்ற குடிநீரை அருந்திய கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சன்னியாசி பேட்டை ஊராட்சி பழைய காலனி பகுதியில் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பராமரிப்பில்லாத குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து சுகாதாரமற்ற நிலையில் குடிநீர் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சிறுவன் உட்பட 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு, கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, சுகாதார குழுவினர் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்