தொடர்ந்து 100 விழுக்காடு தேர்ச்சி.. Nellai எஸ்.ஏ.வி பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி அசத்தல்
நெல்லை வடக்கன்குளம் எஸ்.ஏ.வி பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு மாணவி, 496 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்து வரும் இப்பள்ளியில், 322 மாணவ மாணவிகள் 10ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் லஹைனா என்ற மாணவி 496 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். மேலும், மதுபாலகிருஷ்ணா என்ற மாணவன் 494 மதிப்பெண்களும், ஃபெடோரா மற்றும் யாழினி நிதுரா ஆகிய இரு மாணவிகள் 493 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். மொத்தமாக 31 பேர் 480 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 113 பேர் 450 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 36 மாணவர்கள் வெவ்வேறு பாடங்களில் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.