அண்ணாமலையார் கோவில் உண்டியலில் ரூ.5,000 பணம் திருட்டு - ஒருவர் கைது
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் உண்டியலில் ஒருவர் 5 ஆயிரம் ரூபாயை திருடிய சம்பவம்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவிலில் உள்ள உண்டியலில் இருந்து ஒருவர் 5 ஆயிரம் ரூபாயை திருடியதாக கூறப்படுகிறது. இதனை கண்ட காவல்துறையினர் அவரை பிடித்து திருவண்ணாமலை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சபரிநாதன் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து பணம் மீட்கப்பட்ட நிலையில், வழக்கு பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.