கோடிக்கணக்கான சுற்றுலா பயணிகளை கவர்ந்து வரும் உதகை அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக்ஐவரின் 149-வது நினைவு தினத்தையொட்டி, உதகை ஸ்டீபன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள அவரது கல்லறைக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் தோட்டக்கலை துறை சார்பாக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆண்டோன்றுக்கு சுமார் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்லும் இந்த பூங்காவை 1848-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டை சார்ந்த மெக்ஐவர் என்ற கட்டட கலை வல்லுனர் தொடங்கி வைத்தார். சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு பூங்கா பணிகள் நிறைவடைந்தது, பின்னர் 1867-ம் ஆண்டு சுற்றுலா பயணிகளுக்காக இந்த தாவரவியல் பூங்கா திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.