"பேரிழப்பு.. நன்றியோடு நினைவுகூர்கிறேன்" முதல்வர் ஸ்டாலின் இரங்கல் செய்தி
பிரபல எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நெல்லை வட்டாரத்தை மையப்படுத்திய தனது இலக்கியப் படைப்புகளாலும், சமூகச் செயற்பாடுகளாலும் நன்கு அறியப்பட்டவர் நாறும்பூநாதன் என்றும், அரசு நடத்தும் பொருநை இலக்கியத் திருவிழாவில் முக்கியப் பங்காற்றினார் என்பதை நன்றியோடு இவ்வேளையில் நினைவுகூர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். நாறும்பூநாதனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.