உயிர் நண்பர்களையே குழி வெட்டி புதைத்த இளைஞர்கள் - ரத்த வெள்ளத்தில் சரிந்த 2 உடல்கள்..
Thiruvallur Crime | தன்னிலை மறந்து உயிர் நண்பர்களையே குழி வெட்டி புதைத்த இளைஞர்கள் - ரத்த வெள்ளத்தில் சரிந்த 2 உடல்கள்.. "இனிமே இங்க நான் தான்.."
சில தினங்களுக்கு முன்பு, காணாமல் போன இரண்டு இளைஞர்கள் மிக கொடுரமான முறைல கொன்றுப் புதைக்கப்பட்டிருக்காங்க..
ஊத்துக்கோட்டைய உலுக்கி போட்டுள்ள ரெட்டை கொலையின் பின்னணி என்ன ?
தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்லக்கூடிய ரிஜிஸ்டர் ஆபிஸ் பக்கத்துலயே இரண்டு இளைஞரகள கொன்று புதைச்சது எப்படி ? என்ற கேள்வி தான் அங்கிருந்த எல்லாருக்குள்ளயும் ஓடிட்டு இருந்தது.
பார்ப்பதற்கு அடர்ந்த வனப்பகுதி மாதிரி காட்சி தரக்கூடிய இந்த கிரைம் ஸ்பாட் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம்.
ஆந்திரா – தமிழ்நாடு எல்லையோரத்துல இருக்கக்கூடிய இந்த பகுதிக்கு வெறும் பத்து நிமிஷத்துல ஆந்திராவிலிருந்து கஞ்சா சுட சுட சப்ளை செய்யப்பட்டு வந்திருக்கு.
கட்டற்று கரைபுரண்டு ஓடிய கஞ்சா புழக்கமும், கட்டுபாட்டாற்று கவலையின்று போதையில் திளைத்த இளைஞர்களும் தான் இங்கு நடக்கக்கூடிய பெரும்பாலான குற்றசம்பவங்களுக்கு காரணம்.
சம்பவ இடத்திற்கு ஒரு அக்யூஸ்ட்ட மட்டும் ரகசியமா அழைச்சிட்டு வந்த காவல்துறையினர், அவர் அடையாளம் காட்டிய இடத்த தோண்டி இருக்காங்க.
கொலையாளிகள் அளித்த வாக்குமூலத்தின்படியே அந்த இடத்துல இருந்து இரண்டு இளைஞர்களோட சடலம் மீட்கப்பட்டு இருக்கு.
கொல்லப்பட்டவர்கள் ஜானகிராமன், மற்றும் ஆகாஷ். இருவரும் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பக்கத்துல உள்ள கச்சூர் பகுதிய சேர்ந்தவங்க.
சென்ற 17 ம் தேதி நண்பர்களோடு வெளியே சென்ற ஆகாஷும், ஜானகிராமனும் அதன் பிறகு வீடு திரும்பல.
அவங்களோட செல்போன் இணைப்பும் துண்டிக்கப்பட்ட காரணத்தால சந்தேமடைஞ்ச உறவினர்கள் காவல்நிலையத்துல Man Missing Case கொடுத்திருக்காங்க.
ஆகாஷுக்கு கடந்த நவம்பர் மாதம் நடந்த ஒரு கொலை வழக்குலயும் தொடர்பு இருக்கிறது தெரியவர ஒருவேல பழிக்கு பழிவாங்கும் படலமா இருக்குமோ ? என்ற கோணத்துல போலீஸார் விசாரணைய தீவிர படுத்தி இருக்காங்க.
இந்த சூழல்ல தான் நல்லபாண்டி என்கிற வாலிபர் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்துல ஆகாஷயும், அவரோட நணபர் ஜானகிராமனையும் கொலை செஞ்சி புதைச்சிட்டதா சொல்லி சரண் அடைஞ்சிருக்காரு.
நல்லபாண்டிய கைது பண்ணி விசாரிச்ச காவல்துறை, அவரோட கூட்டாளிகளான காமேஷ் மற்றும் மணி ஆகிய இருவருக்கு கைவிலங்கு மாட்டி இருக்காங்க.
சம்பவம் நடந்த ஜுன் 17 ம் தேதி, நண்பர்கள் ஐந்து பேரும் சப் ரிஜிஸ்டர் ஆபிஸ் பக்கத்துல உள்ள இடத்துல ஒண்ணா Joint அடிச்சிருக்காங்க.
கஞ்சா போதையில மிதந்தப்ப, கடந்த நவம்பர் மாதம் நடந்த கொலை சம்பவம் தொடர்பா நண்பர்களுக்குள்ள வாக்குவாதம் முற்றி கைகலப்பா மாறி இருக்கு.
அதோடு, இந்த ஸ்டேட் பார்டருக்கு “இனிமே நான் தான் எல்லாம்“ எனக் கூறி கெத்து போட்டியில் அடித்து கொண்டுள்ளனர். இதனால பொறுமையிழந்த நல்லபாண்டியும் அவரோட Left Hand காமேஷ் மற்றும் Right Hand மணி ஆகிய மூவரும் சேர்ந்து ஆகாஷ வெட்டி கொலை செஞ்சி இருக்காங்க.
இந்த சம்பவத்த ஜானகிராமன் நேர்ல பார்த்த காரணத்தால போதைல இருந்த மூன்று இளைஞர்களும் அவரையும் சரமாரியா வெட்டி கொலை செஞ்சி. அதே இடத்துல குழித்தோண்டி புதைச்சிருப்பது விசாரணைல உறுதியாகி இருக்கு. கைதான மூன்று பேர் மீதும், கொலை செய்யப்பட்ட ஆகாஷ் மீதும் ஏற்கனவே குற்றவழக்குகள் இருப்பதும், அவர்கள மாதிரி தக்லைஃப் வாழனும்னு ஆசைப்பட்டு சில சிறுவர்கள் இவர்கள தவறான முன் உதாரணமா கொண்டிருப்பதும் காவல்துறையினர கவலை அடைய வெச்சிருக்கு.