சென்னையில் திருமணமான பெண்ணை காதலிக்க வறுபுறுத்திய இளைஞர் ஒருவர், அப்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டுவதாக புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூளைமேடு பகுதியை திருமணமான இளம்பெண் ஒருவர் பணி நிமித்தமாக ஐவின் ரொனால்ட் என்ற நபரிடம் பேசியுள்ளார். இளம்பெண்ணின் புகைப்படத்தை பெற்று நட்பாக பேசி வந்த அந்த நபர், காதலிப்பதாக கூறியுள்ளார். இதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்த நிலையில், புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டு விடுவேன் என மிரட்டுவதாகவும், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.