சுதந்திர தினம் - சென்னை ஜார்ஜ் கோட்டையில் பிரமாண்ட ஏற்பாடு
நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தேசியக் கொடியேற்றி உரையாற்ற உள்ளார்.
தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சென்னை கோட்டை கொத்தளத்திற்கு வரும் முதலமைச்சர் ஸ்டாலின், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார்.
இந்த அணிவகுப்பில் சிறப்பு காவல் படைகள், கேரளா சிறப்பு காவல்படை, காவல் பெண் கமாண்டோக்கள் உள்ளிட்ட போலீசார் பங்கேற்கின்றனர்.
இதனைத்தொடர்ந்து கோட்டை கொத்தளத்தில் காலை 9 மணிக்கு மூவர்ண தேசியக் கொடியை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்றி வைக்கிறார்.
அதைத் தொடர்ந்து சுதந்திர தின உரையாற்றும் முதலமைச்சர் ஸ்டாலின், தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரிலான விருது உள்ளிட்ட விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளார்.
தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக ஏற்பாடு
சென்னை கோட்டை கொத்தளத்திற்கு வரும் முதலமைச்சர் ஸ்டாலின், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார்
அணிவகுப்பில் சிறப்பு காவல் படைகள், கேரளா சிறப்பு காவல்படை, காவல் பெண் கமாண்டோக்கள் உள்ளிட்ட போலீசார் பங்கேற்பு
கோட்டை கொத்தளத்தில் காலை 9 மணிக்கு மூவர்ண தேசியக் கொடியை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்றி வைக்கிறார்
சுதந்திர தின உரையாற்றி விருதுகளை வழங்கி கௌரவிக்கும் முதல்வர் ஸ்டாலின்