இந்தியாவில் திருமணத்தில் 10 தங்க வளையல்கள் அணிவது வழக்கம் - ஐகோர்ட் கொடுத்த அதிரடி உத்தரவு
இந்தியாவில் திருமண நிகழ்வின் போது 10 தங்க வளையல்கள் அணிவது வழக்கம் என தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், சுங்கத்துறை பறிமுதல் செய்த 135 கிராம் எடையுள்ள 10 தங்க வளையல்களை திருப்பி ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது. சபீனா முகமது மொய்தீன் என்பவர் கடந்த 2023ஆம் ஆண்டு திருமண நிகழ்வுக்காக அபுதாபி சென்றுவிட்டு சென்னை திரும்பும் போது, அவர் அணிந்திருந்த 10 தங்க வளையல்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வளையல்களை ரகசியமாக மறைத்து எடுத்து வராத நிலையில், அவற்றை பறிமுதல் செய்தது முறையற்றது எனக்கூறி, நகைகளை திருப்பி ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.