சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை முதல் ராஜாஜி சாலையில் உள்ள ஆர்பிஐ சுரங்கப்பாதை வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காமராஜர் சாலையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிஸ் கார்னர் நோக்கிச் செல்லும் வாகனங்கள், வாலாஜா சாலையில் இடதுபுறம் திரும்பி ஓமந்தூரார் மருத்துவமனை, இராஜா அண்ணாமலை மன்றம், உயர்நீதிமன்றம் வழியாக பாரிஸ் கார்னரை சென்றடையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.