Chennai News | பொது சொத்துக்கு சேதம்- ஃபிலிம் சிட்டி உரிமையாளர் மீது வழக்கு
சென்னையில் மதுபோதையில் கார் ஓட்டி, பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக பூந்தமல்லி ஈவிபி ஃபிலிம் சிட்டி உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா சாலை கிரீம்ஸ் சாலை சந்திப்பில் ஈவிபி ஃபிலிம் சிட்டி உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்து சாலை தடுப்பு, அதில் பொருத்தியிருந்த கேமரா மற்றும் போலீசாரின் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதன்பேரில், சந்தோஷ் ரெட்டி மீது ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.