இடிந்து விழும் அபாயம் - "உயிரை கையில் பிடித்துக்கொண்டு.." பீதியில் சென்னைவாசிகள் | Chennai
இடிந்து விழும் அபாயம் - "உயிரை கையில் பிடித்துக்கொண்டு.." பீதியில் சென்னைவாசிகள் | Chennai
சென்னை அண்ணா நகர் கிழக்கு அவென்யூ பகுதியில், வாழ்வதற்கே தகுதியற்ற நிலையில் உள்ள வீடுகளை இடிக்கக்கோரி வீட்டின் உரிமையாளர்கள் விண்ணப்பித்தும், சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஒப்புதல் வழங்காததால், தினந்தோறும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு அச்சத்துடன் வாழ்வதாக குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 30 வீடுகளுடன் உள்ள அந்த குடியிருப்பை இடித்துவிட்டு புதிதாக குடியிருப்பு கட்டுவதற்கு வீட்டின் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ள நிலையில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமும், சென்னை மாநகராட்சி நிர்வாகமும் காலம் தாழ்த்தி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.