Chennai Electric Train | மின்சார ரயில் மீது கல் வீச்சு - 3 பேருக்கு நேர்ந்த கதி..சென்னையில் பரபரப்பு
சென்னை வியாசர்பாடி அருகே மின்சார ரயில் மீது கல்வீச்சு 3 பயணிகளுக்கு காயம். அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி இன்று மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது. வியாசர்பாடி அருகே வரும் போது அடையாளம் தெரியாத சிலர் ரயில் மீது கல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 3 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.