பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற அளிக்கப்பட்ட அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், உரிமம் பெறாதவர்களுக்கு இன்று முதல் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பை முறைப்படுத்த கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 1 லட்சத்து 5 ஆயிரத்து 556 செல்லப் பிராணிகள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 57 ஆயிரத்து 626 செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது நேற்று ஒரு நாள் மட்டும் 2 ஆயிரத்து 930 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டது.உரிமம் பெறுவதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், உரிமம் பெறாதவர்களுக்கு இன்று முதல் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக, பூங்கா, சாலை உள்ளிட்ட பொது இடங்களில் ஆய்வு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும், (card-6) அதன்பிறகு, வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்யப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.