Chennai Crime | திருநங்கை காதலியிடம் அத்துமீறிய நண்பன்.. சிக்காததால் தந்தைக்கு விழுந்த வெட்டு
Chennai Crime | திருநங்கை காதலியிடம் அத்துமீறிய நண்பன்.. சிக்காததால் தந்தைக்கு விழுந்த வெட்டு - சென்னையில் அதிர்ச்சி
சென்னை ஓட்டேரியில் திருநங்கை காதலியிடம் அத்துமீறிய நண்பன் சிக்காததால் தந்தையை அரிவாளால் வெட்டிய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இளைஞர் கார்த்திக்கின் தந்தை புகார் அளித்ததை அடுத்து, தலைமைச் செயலக குடியிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரசாந்த், புவன், திருநங்கை கீதா மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் இருவர் உட்பட ஐந்து பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதில் பிரசாந்த், புவன் ஆகியோர், போலீசார் கைது செய்யும்போது தப்பி ஓட முயன்றபோது கீழே விழுந்ததில், இருவரது வலது கை எலும்பு முறிந்தது.