இந்தியாவின் முதல் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் பத்மஸ்ரீ கே.எம்.செரியன், உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு வரும் 30-ஆம் தேதி நடைபெறும் என, செரியனின் மகள் சந்தியா செரியன் தெரிவித்திருந்தார். மேலும் அவரது மகன் வெளிநாட்டில் இருப்பதால் வருவதற்கு தாமதமாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் பெங்களூருவில் இருந்து, சென்னை முகப்பேரில் உள்ள மருத்துவமனைக்கு செரியனின் உடல் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து அவரது உடல் வரும் 30-ஆம் தேதி பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.