கண்முன் வந்து போன வின்டேஜ் லைப் ஸ்டைல்.. வியந்து பார்த்து பேசிய நடிகர் அரவிந்த் சாமி..
சென்னை தரமணியில் பழமையான கார்களின் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஓ.எம்.ஆரில் தனியார் நட்சத்திர விடுதி வளாகத்தில் நடைபெற்ற "ஹெரிடேஜ் ரோலர்ஸ் 2025" என்ற பழமையான கார்களின் கண்காட்சியில் 1930, 1940,1960களில் பயன்படுத்தப்பட்ட பிரபல ரோல்ஸ் ராய்ஸ், ஜாகுவார், மெர்சிடிஸ் உள்ளிட்ட நிறுவன கார்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதனை தொடங்கி வைத்த நடிகர் அரவிந்த் சாமி, கார்களின் விவரங்களை கேட்டறிந்தார்.