சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது இடங்களில் கட்டிடக் கழிவுகளை கொட்டினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று வரைவு விதிகள் உருவாக்கப் பட்டுள்ளது. மேலும், ஆயிரம் கிலோ வரையிலான கட்டிடக் கழிவுகளை மாநகராட்சி நிர்வாகமே இலவசமாக எடுத்துச் செல்லும் என்றும், ஒரு டன் முதல் 20 டன் வரையிலான கழிவுகளை எடுத்துச் செல்ல 2,500 ரூபாய் வரை வசூலிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான கருத்துகளை 30 நாட்களுக்குள் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.