Chengalpattu | பேனர்களால் உயிருக்கே ஆபத்து - மக்கள் வைத்த முக்கிய கோரிக்கை
சென்னை புறநகரான படூர் நெடுஞ்சாலையில் சென்ற பைக் மீது பேனர் சாய்ந்த விபத்தில் பைக்கில் சென்றவர் படுகாயம் அடைந்தார். படூர், நாவலூர், முட்டுக்காடு உள்ளிட்ட ஓஎம்ஆர் பகுதிகளில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தனிநபர்களால் சாலை ஓரங்களில் அதிக அளவில் பேனர்கள், பிளக்ஸ்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது வாகன ஓ0ட்.டிகளுக்கு மிகுந்த அபாயமாக உள்ளது. சமீபத்தில் படூர் புறவழிச் சாலையில் காற்றுடன் கூடிய 0மழையில் சாய்ந்த பேனர், பைக்கில் சென்ற நபரின் மீது விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்தார். தொடர்ந்து பேனர்கள் மின் கம்பிகளில் தொங்குவது உள்ளிட்ட அபாயங்களால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...