விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் 95 வயது ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தம்பதியினருக்கு 80-வது திருமண விழா கொண்டாடப்பட்டது. நெல்லிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கந்தசாமி நல்லம்மாள் தம்பதி. இவர்களுக்கு 95 வயதான நிலையில், மகன், மகள், பேரக்குழந்தைகள் உள்ளிட்டவர்கள் இணைந்து, திருமண சதாபிசேஷக விழா நடத்தினர். திருமேனிநாதர் ஆலயத்தில் நடைபெற்ற இந்த விழாவில், உறவினர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும், தென்னை மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டது.