மின்கம்பத்தில் மோதிய பேருந்து - அதிர்ஷ்டவசமாக தப்பிய மாணவர்கள்
கும்பகோணத்தில் அரசு பேருந்து மின்கம்பத்தில் மோதி விபத்து அதிர்ஷ்டவசமாக 40 பள்ளி மாணவர்களும் பயணிகளும் விபத்தில் காயம் இன்றி தப்பினர்
மன்னார்குடியில் இருந்து கும்பகோணம் பேருந்து நிலையத்திற்கு அரசு பேருந்து சற்றுமுன் வந்தது.
திடீரென பிரேக் பிடிக்காததால் பேருந்து நிலையம் அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி பேருந்து நின்றது இதனால் பேருந்தில் இருந்த பள்ளி மாணவர்களும் பயணிகளும் அலறி அடித்து செய்வதறியாது நின்ற வேளையில்,நல்ல நேரமாக
பேருந்து மோதிய வேகத்தில் நின்றது. இதனை அடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக பேருந்து நிலையத்திற்கு சென்றனர்