100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து.. 21 பேர் பலி.. ICU-வில் துடிக்கும் பல உயிர்கள் - மரண ஓலம்
இலங்கையின் நுவரெலியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கையானது 21ஆக அதிகரித்துள்ளது. கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற அரசு பேருந்து, நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில் கொத்மலை ரம்பொட கெரண்டிஎல்ல பகுதியில் 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது... இதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சையில் உள்ள நிலையில், ஓடிக் கொண்டிருந்த பேருந்தில் ஏற்பட்ட திடீர்
தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.